17.5 C
New York

யாழ். பல்கலைக் கழக மாணவி விபத்தில் காயம் – 17 வயதுச் சிறுவன் கைது!

Published:

திருநெல்வேலி பிரதான வீதியில் நடந்து சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதிப் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (21) நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் திருகோணமலையைச் சேர்ந்த மாணவியே காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் 17 வயதுடையவர் என்பதும், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்தியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வாகனத்தை நிறுத்தாது தப்பியோடியபோதே மாணவி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related articles

spot_img

Recent articles

spot_img