17.5 C
New York

நிதிப் பற்றாக்குறையால் முடங்கும் சிறிலங்காவின் அரச நிறுவனங்கள்

Published:

சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களின் ஒப்பந்தகாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை 20 ஆயிரம் கோடிக்கு மேல் காணப்படுகிறது என அரச வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பணப்பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் அத்தியாவசிய செயற்பாடுகளைக் கூட முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமைச்சுக்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது மட்டுமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்களைப் பராமரிப்பதிலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

பல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் பணப்பற்றாக்குறை நிலவுகிறது. சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 20 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இரண்டு அரச வங்கிகளிலிருந்தும் நிதி விடுவிக்கப்படாததால், நெல் சந்தைப்படுத்தல் சபையும் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது.

Related articles

spot_img

Recent articles

spot_img