எதிர்வரும் சில மாதங்களில் அவசர முறைமையின் கீழ் மருந்துகளைக் கொள்வளவு செய்வது முழுமையாக நிறுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாட்டில் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அவசர தேவைகளுக்கு மட்டும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளுக்கு முன்பதிவு செய்து அவை கிடைப்பதற்கு சுமார் 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் ஆகின்றன. மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்களிலும், நிதித் திட்டுப்பர்டு ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் அவசர முறைமை ஒன்று பின்பற்றப்படுகின்றது.
மருந்து கொள்வனவு செய்யும் அவசர முறைமைக்கும், சாதாரண முறைமைக்கும் இடையே கால அளவு மட்டுமே வேறுபடுகின்றது. – என்றார்.