North

படகில் கஞ்சா கடத்தியவர் தாழையடிக் கடலில் கைது!

வடமராட்சி கிழக்கு, தாழையடிக் கடற்பகுதியில் படகில் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கிளிநொச்சி, தருமபுரத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கேசன்துறைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காங்கேசன்துறை மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சந்தேககநபரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.

Kankasanthurai K.K.S Police Station
Kankasanthurai K.K.S Police Station

நேற்று (ஓகஸ்ட் 6) இரவு சந்தேகத்துக்கு இடமான படகொன்றைக் கடற்படையினர் சோதனையிட்டபோது, படகில் கஞ்சா கடத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. படகில் இருந்தவர்கள் கடலில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் தப்பியோடியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காங்கேசன்துறை மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Posts