திருகோணமலையில் நடந்த விமான விபத்தில் விமானப் படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (ஓகஸ்ட் 7) நடந்துள்ளது.
சீனன்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரி 6 ( PT6) ரகப் பயிற்சி விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானம் இன்று காலை விமானப் பாதையில் இருந்து விமானப் பரிசோதனைக்காகப் புறப்பட்டது என்பதை சிறிலங்கா விமானப் படை உறுதிப்படுத்தியது.
இந்த விமானம் முற்பகல் 11.27 மணியளவில் சீனன்குடாவில் உள்ள விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணித்த அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர் என்று விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளுக்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்தார்.