யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கைகள் கட்டப்பட்ட நிலையில், உடலில் அடிகாயங்கள் காணப்படும் நிலையில், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார், இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தினர்.
சுமார் 47 வயது மதிக்கத்தக்கவரே கொல்லப்பட்டுள்ளார். இவரது உடல் வீட்டுக்குள் ஆடைகள் அற்ற நிலையில் காணப்பட்டது.

திருமணமான இவர் நேற்று இரவு வீட்டில் தனித்திருந்தபோது தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இவரது மனைவி பிள்ளைகள் நிகழ்வொன்றுக்காக சென்றிருந்ததால் நேற்றிரவு வீட்டில் தங்கவில்லை.
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான், சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
மேலதிக விவரங்கள் இணைக்கப்படும்.