சாவகச்சேரி விபத்தில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

Yarl Naatham

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இன்று (ஓகஸ்ட் 13) நடந்த விபத்தில் மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து முற்பகல் 11.30 மணியளவில் நடந்துள்ளது.

சாவகச்சேரி, கண்டுவில் வீதியைச் சேர்ந்த சிவபாலகன் பிரவீன் என்ற 19 வயது இளைஞரே உயிரிழந்தவராவார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கின்றார்.

விபத்துக்குள்ளான லொறி
விபத்துக்குள்ளான லொறி

ஏ-9 வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரவீன் லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட லொறி மாட்டு வண்டி சவாரிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்துத் தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள்
இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள்
TAGGED:
Share This Article
Leave a comment
error: Content is protected !!