யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று (ஓகஸ்ட் 14) நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கைச் சேர்ந்த நாவேந்தன் கௌரிமலர் என்ற 52 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் சமுர்த்தி வங்கி முகாமையாளராவார்.
கோப்பாய் சந்தியை மோட்டார்சைக்கிளில் கடக்க முயன்ற இவர் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோத விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் மக்கள் கூடியதால் வீதிப் போக்குவரத்துத் தடைப்பட்டதுடன், பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.