யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றின் மீது இன்று (ஓகஸ்ட் 15) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து வீட்டிலிருந்த பொருள்களை அடித்து நொருக்கியுள்ளது.
மோட்டார் சைக்கிள், யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்புக் கமராக்கள் என்பவற்றை அடித்து நொருக்கிய அந்தக் கும்பல், புத்தகப் பையைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.
ஆறு பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அந்தக் கும்பலில் ஒருவர் பெண்களின் சுடிதார் அணிந்திருந்தமை பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.