மாங்குளத்தில் இன்று (ஓகஸ்ட் 5) அதிகாலை நடந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏ-9 வீதியில் பனிச்சங்குளம் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம், வெல்லம்பிட்டிய, முல்லேரியா ஆகிய இடங்களைச் சேர்ந்த 58, 46 மற்றும் 38 வயதுடையவர்கள்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹையேஸ் வாகனம், வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்து நடந்துள்ளது. லொறியின் பின்புறம் நின்றிருந்த ஒருவரும், ஹையேஸ் வாகனத்தில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஹையேஸ் மற்றும் லொறியில் பயணித்த 3 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் மாங்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹையேஸ் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.