பாம்பு தீண்டிய ஒரு வயதும் ஏழு மாதங்களுமேயான சிறுவன் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
கிளிநொச்சி, தருமபுரம் பிரமனந்தனாறைச் சேர்ந்த தனுசன் ஜெஸ்மின் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு படுக்கையில் சிறுவனைப் பாம்பு தீண்டியுள்ளது. உறவினர்கள் சிறுவனை உடனடியாக தருமபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகச் சிறுவன் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சிறுவனைக் கடித்த பாம்பும் உறவினர்களால் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. கிளிநொச்சி மருத்துவமனையில் இருந்து சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு, பொரல்ல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சிறுவனுக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும், சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.