வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள் இருவர் நீர் நிறைந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இரு மாணவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கும், பாடசாலைச் சமூகத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதிருப்பதை அனைவரும் உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.