யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரா பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா இன்று (ஒகஸ்ட் 18) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் நிறைவடைவதையடுத்து, துணைவேந்தர் பதவிக்காக தற்போதைய துணைவேந்தர் பேராாசிரியர் சிறிசற்குணராஜா, உயர்பட்டப் படிப்புக்கள் பீடாதிபதி செ.கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல்துறைப் பேராசிரியர் பி.வினோபாபா ஆகியோர் விண்ணப்பத்திருந்தனர்.
பல்கலைக் கழகத் துணைவேந்தரை நியமிப்பதற்காக புள்ளியிடலுக்காக யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவை கடந்த 12ஆம் திகதி கூடியது.
திறமைப்புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் வரிசைப்படுத்தப்பட்டனர்.
பேரவையின் பரிந்துரை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் யாழ். பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குத் துணைவேந்தராகப் பதவி வகிப்பார்.