North

வடமராட்சி கலிகையில் நடந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

வடமராட்சி, கலிகையில் இன்று (ஓகஸ்ட் 20) அதிகாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வீதி வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மதகுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் வதிரியைச் சேர்ந்த வி.நிசாந்தன் என்ற 29 வயது இளைஞரும், மன்னாரைச் சேர்ந்த செ.வின்சன் மனோாஜ்குமார் என்ற 31 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர். வின்சன் மனோஜ்குமார் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts