120 மருத்துவர்களைக் கறுப்புப் பட்டியலில் இணைத்த சுகாதார அமைச்சு

Yarl Naatham

நாட்டிலிருந்து வெளியேறிய 120 விசேட மருத்துவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத விசேட மருத்துவர்களே கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் இந்த ஆண்டின் ஓகஸ்ட் 18ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 363 மருத்துவர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ளனர். அவர்களில் 120 பேர் மீண்டும் நாடு திரும்பவில்லை. 29 மயக்கவியல் நிபுணர்களில் 12 பேர் நாடு திரும்பவில்லை.

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர்கள் நாடு திரும்ப முடியும். ஆனால் அவர்கள் மருத்துவ சேவையில் ஈடுபடுவதானால் பொதுச் சேவை ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்வது அவசியம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!