அடித்தால் திருப்பி அடியுங்கள் – மனோ கணேசன் ஆவேசம்

Yarl Naatham

மலையக மக்களை யாரேனும் தாக்கினால் அந்த வன்முறைக்கு எதிராகவும், தற்காத்துக் கொள்ளவும் திருப்பி அடியுங்கள். அது சட்ட வரம்புக்கு உட்பட்டதே என்று தெரிவித்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200வருட வரலாறு’ எனும் வரலாற்று நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நேற்றுமுன்தினம் மாத்தளையில் மலையக மக்கள் சிலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கமும், சட்டமும் எங்களுக்குப் பாதுகாப்புத் தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும். வன்முறையாளர்களுக்கு அடிதான் புரிகின்ற வார்த்தை எனில் அதைப் பேச நாம் தயார் என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.

நீதியரசர் இளஞ்செழியன் தனது தீர்ப்பு ஒன்றில், தற்காப்புக்காக திருப்பி அடிக்கும் உரிமையின் சட்டவரம்பு பற்றி கூறியுள்ளார். அதையே நான் இங்கு பிரதிபலிக்கிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். ஆனால், நாம் பலமுறை கூறியும், அவரது அரசாங்கம், எமது மக்களுக்கு எதிராக பெருந்தோட்ட நிர்வாகங்கள் நடத்தும் அராஜகங்களை கண்டும் காணாமல் இருக்கிறது.

பெருந்தோட்டங்களில் எமது மக்களின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தராவிட்டால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share This Article
1 Comment
error: Content is protected !!