மதுபானசாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வவுனியா, பூந்தோட்டத்தில் நடந்துள்ளது. மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தங்கராசா பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பூந்தோட்டம் சந்தியில் உள்ள மதுபானசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இருவர் தாக்குதல் நடத்தியதில் குறித்த நபர் படுகாயமடைந்திருந்தார். வவுனியா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றுக்காலை உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூந்தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக் கமராப் பதிவுகள் அடிப்படையில் மற்றொருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.