திடீர்க் காய்ச்சலால் 8 நாள் குழந்தை யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

Yarl Naatham

காய்ச்சல் காரணமாக 8 நாள் ஆண்குழந்தை ஒன்று உயிரிந்துள்ளது. இந்தச் சம்பவம் நயினாதீவு, முதலாம் வட்டாரத்தில் நடந்துள்ளது. மதிவண்ணன் சுதர்சா என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 19ஆம் திகதி குழந்தை நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்கு மாற்றப்பட்டது.

குழந்தைக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றிக் குழந்தை நேற்று உயிரிழந்தது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்..

Share This Article
1 Comment
error: Content is protected !!