வடமராட்சி, கொற்றாவத்தையில் இன்று நடந்த விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞர் ஒருவர் படுகாயமடைநதுளு்ளார்.
சிறுவன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நிலையில், மோடடார்சைக்கிள் வளைவொன்றில் டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்தின்பின்னர் மோட்டார் சைக்கிள் சுமார் 20 அடி தூரம் இழுததுச் செல்லப்பட்டது. மோட்டார் சைக்கிளின் எண்ணெய் தாங்கியும் தீப்பற்றி எரிந்தது.
கொற்றாவத்தையைச் சேர்ந்த இ.சாகித்தியன் என்ற 14 வயதுச் சிறுவன் விபத்தில் சிக்கி தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.