இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு நடத்தும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் 9ஆம் நாள் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகக் கணக்காளர் அழகுராஜா நிர்மல் தலைமையில் நடைபெறும் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாசினி மதியழகனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் கலாநிதி பொன்னுத்துரை சந்திரசேகரனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கோப்பாய் பிரதேச பராசக்தி அம்மன் சிவபூரணி முத்தமிழ் மன்ற நாகலிங்கேஸ்வரர் நவமங்கஐ நிவாச அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
கோப்பாய் பிரதேச செயலக, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வி.மகிந்தினியின் “வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை ” என்னும் கருத்துரையும், யாழ். மத்திய கல்லூரி ஆசிரியர் செ.லோகேஸ்வரனின் “யாழ்ப்பாணத்து ஞானிகள்” என்னும் விடயப் பொருளில் சிறப்புரையும், மா.ந.பரமேஸ்வரனின் திருப்புகழ் கச்சேரியும் சிறப்பு நிகழ்வுகளாக நடைபெறவுள்ளன.