நினைவுகளை இழக்கும் இலங்கையர்கள் – பேராபத்தாக முடியுமா?

Yarl Naatham
கோப்புப் படம்

இலங்கையின் சனத்தொகையில் 4 சதவீதமானவர்கள் டிமேன்ஷியா எனப்படும் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மூளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மனநல மருத்துவ நிபுணர் என்.குமரநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சிகள் அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

சரியான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என்பவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

அவற்றைக் கட்டுப்படுத்துவதன் ஊடுாக டிமென்ஷியா ஏற்படுவதைக் குறைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!