பழைய மாணவர் ஒன்றுகூடலில் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

Yarl Naatham

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் ஒன்றுகூடலில் நடனமாடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்தவரும், தற்போது கனடாவில் வசிப்பவருமான 61 வயதுடைய நா.சசிதரன் என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த சனிக்கிழமை பழைய மாணவர் ஒன்றுகூடல் தெல்லிப்பளையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒன்றுகூடலில் பாடல் ஒன்றுக்கு நடமாடிக் கொண்டிருந்த சசிதரன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!