North

மாவா பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்ட மாணவன் கைது – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்

மாவா பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவக குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரே ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர் ஒருவரே மாவா பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts