ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பதற்கான நகர்வுகள் அரசியல் களத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகாவாகக் கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஊடாகவே ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனத் தெரியவருகின்றது.
இந்த முயற்சியின் ஓர் அங்கமாகவே மீண்டும் தாய்வீடு திரும்புங்கள் என சஜித் அணிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான ரவி கருணாநாயக்க ஓரிரு நாள்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
சஜித் அணியில் உள்ள தலதா அத்துகோரள, கபீர் ஹாசீம், ரோகினி கவிரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அணிகளும் இணைவதற்கு தமது ஆதரவை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த சம்மேளனம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதன்போதும் இணைவுக்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.