முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாலை அல்லது இரவு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் சிலபகுதிகளில் நேற்று மழை கிடைத்துள்ள நிலையில், இன்றும் (ஓகஸ்ட் 30) சில பகுதிகளில் மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிலீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
அதேநேரம், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.