சீன எரிபொருள் விற்பனை நிறுவனமான சினோபெக் (SINOPEC) இலங்கையில் தனது எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சந்தை விலையை விடவும் 3 ரூபா குறைவாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளது.
சினோபெக் (SINOPEC) நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையததை கொட்டாவ, மத்தேகொடவில் திறந்துள்ளது. இதுவரை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழிருந்த இந்த நிரப்பு நிலையம், சினோபெக்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சினோபெக் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இலங்கையில் தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றது.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சினொபெக் நிறுவனம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயற்படுத்த 20 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.