சந்நிதியில் பக்தகோடிகளிடம் கைவரிசையைக் காட்டிய கேடிகள்! – பல பவுண் நகைகள் ‘அபேஸ்’

Yarl Naatham
செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா

தொண்டைமானாறு செல்வச்சந்தி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது வழமையைவிடவும் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் நேற்றைய தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

காவடி எடுத்தல், அடியழித்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், கற்பூரச்சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக் கடன்களையும் பெருமளவான பக்தர்கள் நிறைவேற்றினர்.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்

அதேவேளை, பக்தர் கூட்டத்தைப் பயன்படுத்தித் திருடர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பல பக்தர்கள் தங்கள் தங்க நகைகளைப் பறிகொடுத்துவிட்டு அலைந்து திரிந்ததையும் காண முடிந்தது.

நேற்று தேர்த்திருவிழாவில் மட்டும் சுமார் 25 பவுண் நகைகள் திருட்டுப்போயுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. நகைகள் திருடப்பட்டமை தொடர்பாகத் தங்களுக்கு முறைப்பாடுகள் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் நேற்று மாலை தெரிவித்தனர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!