North

உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

வவுனியா, மடுக்குளத்தில் உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மற்றொரு சிறுவன் காயமடைந்துள்ளார்.

மடுக்குளத்தில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் பயணித்தபோதே உழவியந்திரம் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது. உழவியந்திரத்தின் பின்புறம் இருந்து பயணித்த சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாகச் சிறுவனை மீட்டு பூவரசங்குளம் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும், அதற்கு முன்னதாகவே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts