எரிபொருள் விலைகள் இன்று (ஓகஸ்ட் 31) நடைமுறைக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபா.
95 ஒக்டேன் பெற்றோலின் விலை 42 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4177 ரூபா.
ஓட்டோ டீசலின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 341 ரூபா.
சுப்பர் டீசலின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 359 ரூபா.
மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 231 ரூபா.