நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த எரிபொருள் கிஆர் முறைமை இன்று (செப்ரெம்பர் 1) முதல் நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் கிஆர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
கியூஆர் முறைமை மூலம் குறித்தொதுக்கப்பட்ட எரிபொருள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.