பெண்கள் சாதாரணமாகவே சிகையலங்காரத்தில் கவனம் செலுத்தினாலும், பெரும்பாலானோருக்குத் தங்கள் முகத்துக்கு ஏற்ற சிகையலங்காரத்தைத் தெரிவு செய்யத் தெரிவதில்லை. அனைவருக்கும் ஒரு சிகை அலங்காரம் பொருந்தாது. முகத்தின் அமைப்புக்கு ஏற்றவாறு சிகைலங்காரம் செய்தாலே எடுப்பாக இருக்கும்.
நீள்வட்ட முகம் கொண்டவர்கள்
நீள்வட்ட முகம் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலாக சிகையலங்காரங்கள் பொருந்தும். ப்ரீ ஹேர், போனி டைல் போன்ற சிகையலங்காரங்கள் மிக அழகாக இருக்கும்.
ஆனால் இவர்கள் நடுவகிடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் முகம் இன்னமும் நீளமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல மூக்கையும் சற்றுப் பெரிதாகக் காட்டும்.
சதுர முகம் கொண்டவர்கள்
சதுர முகம் கெண்டவர்களுக்கு நீளமான கூந்தல் அழகாக இருக்கும். கூந்தலைப் பின்புறம் உயர்த்திக் கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி செய்யுங்கள்.
போனி டைல் போன்ற சிகை அலங்காரத்தைத் தவிருங்கள். குட்டை முடியாக இருந்தால் லேயர் லேயராக பொப் கட் செய்யலாம். ஆனால் கூந்தலை குட்டையாக வெட்டும்போது, முடியை ஒரே அளவில் வெட்டினால் அதிக அழகைக் கொடுக்கும்.
வட்ட முகம் கொண்டவர்கள்
வட்ட முகமுடையவர்களின் கன்னங்களில் அதிக சதை இருந்தால் அவர்களின் தோள்கள் அளவுக்கு முடியை லேயர்கட் செய்து செய்துகொள்ளலாம். சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட்னிங் செய்யலாம். அப்போது வட்ட முக வடிவம் உடையவர்கள் முகம் சற்று நீளமாகத் தோன்றும்.