North

கனடா ஆசை காட்டி யாழ்ப்பாணத்தில் 54 லட்சம் ரூபா ‘அபேஸ்’ – வலைவீசும் பொலிஸார்!

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள குடும்பம் ஒன்றிடம் 54 லட்சம் ரூபாவைச் ‘சுருட்டியவரை’ பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே கனடா செல்லும் ஆசையில் 54 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்துள்ளது.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த முகவர் ஒருவரே இந்த மோசடிச் செயலைச் செய்துள்ளார். கனடாவுக்கான போலி விசா ஒன்றைத் தயாரித்து, அதைக்காட்டி மேலும் சில லட்சங்களை அவர் சுருட்ட முயன்றபோதே குடும்பத்தினர் சுதாரித்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் சந்தேகநபர் கைது செய்யப்படுவார் என்று யாழ். மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தில அண்மைக் காலமாக கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்துப் பல பண மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

Related Posts