North

காசோலை மோசடி மூலம் பல லட்சங்கள் ஏப்பம்! – யாழில் இருவர் கைது!

காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவர் நேற்று (செப்ரெம்பர் 1) யாழ்.மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் இருந்து மூன்று வார விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்த ஒருவரிடம் உரும்பிராயைச் சேர்ந்த ஒருவர் 72 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றதுடன், அதற்குப் பொறுப்பாக காசோலை வழங்கியுள்ளார்.

அந்தக் காசோலையை வங்கியில் வைப்பிலிட்டபோது, கணக்கில் பணமில்லாததால் காசோலை திரும்பியுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

இதுதவிர, காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மற்றொருவரும் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

இதுதவிர, காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மற்றொருவரும் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிடம் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட 18 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வங்கிக் கணக்கில் பணமின்றித் திரும்பியுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

Related Posts