North

பணப்பிரச்சினை காரணமாக கடத்தப்பட்ட பழ வியாபாரி – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் பழ வியாபாரி ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (செப்ரெம்பர் 2) நடந்துள்ளது. வாகனத்தில் வந்த 12 பேர் கொண்ட குழுவே பழவியாபாரியைக் கடத்திச் சென்றது என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

23 வயதான இந்தப் பழ வியாபாரி கொடுக்கல், வாங்கப் பிரச்சினை காரணமாகவே கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

3 லட்சத்து 20 ஆயிரம் ரூபா கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக கிளிநொச்சியில் இருந்து வந்த குழு அவரைத் தாக்கிக் கடத்திச் சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts