ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று (செப்ரெம்பர் 2) நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
48.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது. ஹர்திக் பாண்டியா 87 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 82 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுக்களையும், ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட முன்னர் மழை குறுக்கிட்டது. தொடர்ந்தும் அங்கு மழை பெய்துவருவதால் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.