2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்னமும் 2 அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் 6ஆம் திகதிக்கு முன்னர் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளில் ஏற்பட்ட தாமத்தால் பெறுபேறு வெளியிடுவது தாமதமாகியிருந்தது.