யாழில் உயிரைப் பறித்த மீற்றர் வட்டி – தாய் இறந்தது தெரியாது கால்களைப் பிடித்துக் கதறும் 3 மாதக் குழந்தை!

Yarl Naatham
FILE PHOTO

மீற்றர் வட்டிக் கடன் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதான ஜெயராசா அருள்பாலினி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். இவருக்கு 3 பிள்ளைகள். அவருக்கு 3 மாதத்தில் குழந்தை ஒன்றும் உள்ளது.

மீற்றர் வட்டிக்குக் கடன் வாங்கிய இவர் கடனை மீளச் செலுத்த முடியாது கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது. கடன் நெருக்கடியால் அவர் இறுதியில் தவறான முடிவெடுக்கத் தூண்டப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

நேற்று வீட்டில் எவரும் இல்லாத நேரம் அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அருள்பாலினி இறந்த விடயம் தெரியவந்திருக்கின்றது.

வீட்டிலிருந்து நீண்டநேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டு சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டுக்குள் சென்றபோது அருள்நிதியின் 3 மாதக் குழந்தை தாய் இறந்தது தெரியாது தாயின் கால்களைக் கட்டிப்படித்தபடி அழுதுகொண்டிருந்தது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share This Article
Leave a comment
error: Content is protected !!