Sport

2023 Asia Cup: நேபாள அணியை நோகாது வென்றது இந்தியா!

ஆசியக் கிண்ண இன்றைய (செப்ரெம்பர் 5) ஆட்டத்தில் நேபாளம் கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் அணி வெற்றி கொண்டது.

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 48.2 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. ஆசிப் ஷேக் அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து 17 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

மழை ஓய்ந்ததும் டக்வேத் லூயில் முறைக்கு அமைய ஆட்டம் 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், இந்திய அணியின் வெற்றி இலக்கு 145 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

நேபாள அணியின் பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்தத் தவற, இந்திய அணி 20.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் சார்பாக அணித்தலைவர் ரோஹித் சர்மா 74 ஓட்டங்களையும், சும்மன் கில் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related Posts