North

இளைஞர்களின் உயிரைப் பறித்த அதிவேகம் – வடக்கில் நடந்த துயரச் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டதில் ஒட்டுசுட்டான் – மாங்குளம் பிரதான வீதியில் நேற்று இரவு (செப்ரெம்பர் 5) நடந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரு இளைஞர்களும் வீதியில் தரித்து நின்ற உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

முள்ளியவளை, பொன்னநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்தவர்களாவர்.

உழவியந்திரத்துடன் மோதிய இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு மாகாணத்தில் நாளாந்தம் வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன. வீதி விபத்துக்கள் பலவற்றுக்கு அதிவேகப் பயணமே காரணமாக இருக்கின்றது. விபத்துக்களில் இள வயதினரே அதிகம் உயிரிழக்கின்றனர்.

Related Posts