யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் கைத்தொலைபேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களான மாணவர்களிடம், பொலிஸார் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் போதைப்பொருள்களின் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள்களைக் கொள்வனவு செய்வதற்குப் பணம் தேவை என்பதால் இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டமையும் தெரியவந்துள்ளது.