North

மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம் – வவுனியாவில் பரபரப்பு

அண்மையில் வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றுக்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

சிறுமியின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தச் இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்குகள் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அந்தச் சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து மாயமாகியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இது வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் நெளுக்குளம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts