வவுனியாவில் நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 8) இரவு நடந்த விபத்தில் பொலிஸ் கொன்ஸ்டாபிள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து ஓமந்தை – விளக்குவைத்தகுளத்தில் ஏ-9 வீதியில் நடந்துள்ளது. புளியங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கொன்ஸ்டாபிள் கருணாதிலக்க (வயது-55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளத்துக்கு மோட்டார்சைக்கிளில் பயணித்த கொன்ஸ்டாபிளை மோதியது என்று கூறப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஓமந்தைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.