யாழில் கனடா அனுப்புவதாகக் கூறி 55 லட்சம் ரூபா சுருட்டிய கில்லாடி!

Yarl Naatham

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 55 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட விசேடக் குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பைச் சேர்ந்த ஒருவரே கனடா ஆசை காட்டி பணத்தை மோசடி செய்துள்ளார். போலி ஆவணங்களைக் காட்டி, பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் கனடா அனுப்புவதாகக கூறி பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த வாரமும் இவ்வாறு கனடா ஆசையால் சுமார் 54 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேடக் குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

போலி வாக்குறுதிகளை வழங்கி பணத்தை மோசடி செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!