யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கில் அரிசி ஆலை ஒன்று தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் அரிசி ஆலை பூட்டப்பட்டுப் பணியாளர்கள் சென்றிருந்த நிலையில், நேற்றுக் காலை அரிசி ஆலையைத் திறந்தபோது அரிசி ஆலை தீயில் எரிந்து கொண்டிருந்தது.
அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும், அங்கிருந்த தளபாடங்கள், இயந்திரங்கள் தீயால் முற்றாகச் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெல்லிப்பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.