யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கார் ஒன்றில் வந்தவர்களே தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, சம்பவ நேரத்தில் தாக்குதலுக்கு இலக்கானவருடன் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உடனிருந்தார் என்று கூறப்படுகின்றது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவருடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனிருந்தமை தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.