North

யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் நாளை மின்தடை

பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (செப்ரெம்பர் 14) வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் – தோப்புக்காடு, ஊரி, களபூமி – பாலக்காடு அம்மன் கோயிலடி, காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம், காரைநகர் சீனோர் படகுத்துறை, காரைநகர் கடற்படைத்தளம், காரைநகர் கடற்படை முகாம் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts