ஸ்மார்ட் கைபேசி கடமை நேரத்தில் வேண்டாம் – யாழ். போதனா மருத்துவமனையில் கண்டிப்பான உத்தரவு!

Yarl Naatham

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணியாளர்கள் ஸமாட்ர் கைபேசிகளைக் கடமை நேரத்தில் உபயோகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை அகற்றப்பட்டமை தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், நோயாளர் பராமரிப்பில் ஈடுபடுவர்கள் கடமை நேரத்தில் ஸ்மார்ட் கைபேசிகளை உபயோகிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் தேவைக்கு சாதாரண கைபேசிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனைகளில் தாதியர்களும் ஏனையோரும் கடமை நேரத்தில் ஸ்மார்ட் கைபேசிககளில் மூழ்கியியுள்ளனர் என்பது நேயாளர்களின் பரவலான குற்றச்சாட்டு. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக்கு பலரும் வரவேற்புத் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், இந்த நடைமுறை சரியாகச் செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!