கிளிநொச்சி, பூநகரியில் இன்று (செப்ரெம்பர் 16) நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில், வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
விபத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது.
விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.