East

தமிழனா என்று கேட்டுத் தாக்கிய காடையர் குழு! – தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி கடும் சேதம்!

தியாகி திலீபனின் உருவப்படத்துடன் பயணித்த நினைவு ஊர்தி காடையர்களால் தாக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (செப்ரெம்பர் 16) திருகோணமலை, சர்தாபுரத்தில் நடந்துள்ளது. ஊர்தியுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவு ஊர்தி கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம், நல்லூர் நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தது.

இன்று மூதூர், கட்டைப்பறிச்சானில் இருந்து ஆலங்கேணி, தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நோக்கி ஏ-6 வீதியூடாகப் பயணித்தபோதே சர்தாபுரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீதியில் கற்களைக் கொண்டு தடைகள் ஏற்படுத்திய பெரும்பான்மையினத்தவர்கள் நினைவு ஊர்தி மீதும், அதனுடன் பயணித்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அங்கு பொலிஸார் இருந்தபோதும், தாக்குதல் நடத்தியவர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நினைவு ஊர்தி திருகோணமலை நகரத்துக்குள் நுழைய விடாது திருப்பி அனுப்பப்பட்டது.

Related Posts