கோயிலுக்கு இலட்சக் கணக்கில் கொட்டிக் கொடுத்த யாசகர்! – யாழில் ஆச்சரியப்பட வைத்த சம்பவம்!

Yarl Naatham

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் யாசகம் பெறும் ஒருவர் கோயில் பாலஸ்தானத்துக்காக 2 இலட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் வண்ணை வெங்கட ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம் பாலஸ்டதானம் செய்யப்படவுள்ள நிலையில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆலயத் திருப்பணிக்காகப் பலரும் நிதியுதவி அளிப்பது வழமை. ஆனால் ஆலயச் சூழலில் யாசகம் பெறும் ஒருவர் 2 லட்சம் ரூபாவை ஆலயத்துக்கு வழங்கியுள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்தப் பணத்தை யாசகம் பெற்றே சேகரித்தேன் என்று அந்த யாசகர் தெரிவித்துள்ளார். அவர் இந்தப் பணத்தை இன்று (செப்ரெம்பர் 17) ஆலய நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்.

Share This Article
error: Content is protected !!